search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்"

    விளாத்திகுளத்தில் வருகிற 8-ந்தேதி ம.தி.மு.க. செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வைகோ பங்கேற்கிறார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பணிக்குழு செயல்வீரர்கள் கூட்டம், வருகிற 8-ந்தேதி மாலை 4 மணிக்கு விளாத்திகுளத்தில் உள்ள அக்கம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

    இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடி பணிக்குழுவில் உள்ள செயல்வீரர்களுக்கு அடையாள அட்டை வழங்கி தேர்தல் பணிகள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த கூட்டத்துக்கு நான் (ஆர்.எஸ்.ரமேஷ்) தலைமை தாங்குகிறேன். அவைத்தலைவர் சம்பத்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் பவுன்மாரியப்பன், தாயகம் செல்வராஜ், வக்கீல் குருசாமி கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் செண்பகபெருமாள் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ் வரவேற்கிறார். முடிவில் நகர செயலாளர் கோட்டைசாமி நன்றி கூறுகிறார்.

    முன்னதாக விளாத்திகுளம் வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிற்கு, விளாத்திகுளம் எல்லையான ஆற்றுப்பாலம் அருகில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நகர மெயின் பஜாரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வானவேடிக்கை வரவேற்பு கொடுக்கப்படுகிறது. விளாத்திகுளம் நகர முக்கிய வீதிகளில் 500-க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் நடப்பட்டு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு மின்விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டு உள்ளது.

    கூட்டத்தில் செயல்வீரர்கள், வாக்காளர் பணிக்குழு செயல்வீரர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    லாலாபேட்டை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    லாலாபேட்டை:

    லாலாபேட்டை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராமலிங்கம் கேசவன் தலைமை தாங்கினார். இதில் செப்டம்பர் மாதம் ஈரோட்டில் நடைபெறும் மாநில மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்வது, உட் கட்சியை மேம்படுத்துதல் பொது செயலாளர் வழியில் நடப்பது என தீர்மானிக்கப்பட்டது. 

    கூட்டத்தில் கரூப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டி வைகோ நகரில் சிமெண்ட் சாலை அமைக்க வலியுறுத்தபட்டது, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றித்தில் மேட்டு திருக்காம் புலியூரில் விவசாயம் நிலங்களுக்கு செல்லும் பாலம் சேதமடைந்துள்ளது அதை புதுபித்து தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சங்கப் பிள்ளை, மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் பொன்னம்பலம், வெங்கடாசலம், ஆனந்த், சோமு ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நன்றி அன்பு கூறினர்.

    ×